இயேசு படத்தில் அனுஷ்கா - நாகார்ஜூனா!


இயேசுவின் குழந்தைப்பருவத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை அனுஷ்காவும், நடிகை நாகார்ஜூனாவும் நடிக்கவுள்ளனர். தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவ், புதிதாக குழந்தைகளுக்கான படத்தை இயக்கவுள்ளார். இயேசுவின் குழந்தைப் பருவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஒன்பது முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் நடிக்கின்றனர். இயேசு வாழ்ந்த அதாவது அவர் பயணப்பட்ட அந்தந்த இடங்களுக்கே சென்று படமாக்க இருக்கின்றார். படத்தின் பெயர் பிரின்ஸஸ் ஆப் பீஸ். தமிழில் சமாதானத்தின் இளவரசன்.

இந்த படத்தில் குழந்தைகளை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் நாகார்ஜுனாவும், அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய ஆறு மொழிகளில் இந்தபடம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்தை பதிவு செய்யுங்கள்


2leep.com